அதிமுக சார்பில் முதற்கட்ட தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரத்தை தூத்துக்குடியில் முக்கிய வீதிகளில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.
On behalf of the AIADMK, former minister C.T. Chellapandian distributed a pamphlet containing the initial election manifesto on the main streets of Thoothukudi.

அதிமுக சார்பில் முதற்கட்ட தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரத்தை தூத்துக்குடியில் முக்கிய வீதிகளில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்.
தூத்துக்குடி எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையாக முதற்கட்டம் ஐந்து திட்டங்களை அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் பிறந்த நாளன்று அறிவித்தார். அதோடு அறிவித்த திட்டங்களின் தொகுப்பை பொதுமக்களிடையே தெரியப்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் விநியோகிக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம் வியாபாாிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் முக்கிய வீதிகள் வழியாக சென்று துண்டு பிரசுரம் விநியோம் செய்தாா்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சேகர், வர்த்தக அணி செயலாளர் துரைசிங், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு மாவட்ட ஜெ பேரவை துணைச் செயலாளர் அமலதாசன், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்குமாா், துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் கவுன்சிலா்கள் அகஸ்டின் எட்வின் பாண்டியன், சகாயராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சண்முத்தாய், வட்ட செயலாளர்கள் சகாயராஜா அருண்குமாா், மாவட்ட பிரதிநிதிகள் அசரியான் ஜேடியம்மா சாந்தி போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் சண்முகராஜ் ராஜேந்திரன் பேச்சியப்பன் முருகன் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் அபுதாஹிர் மற்றும் ராஜா அந்தோனி செல்வராஜ் மணிகண்டன் ஜோதிகா மாரி நயினார் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
admin